/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தற்காலிக ஆசிரியர் நியமிக்க கோரிக்கை

ADDED : ஜூன் 25, 2024 07:14 AM
மயிலம், : விழுப்புரம் மாவட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணக்குப்பதிவியல், வரலாறு புவியியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
இதை போக்குவதற்கு கடந்த கல்வி ஆண்டில் 2013ம் ஆண்டு பிறகு டெட் தேர்வு எழுதிய ஆசிரியர்களை தற்காலிக ஆசிரியர்களாக பள்ளிகளில் நியமனம் செய்தனர். இது பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கும் விதமாக இருந்தது.
இந்த ஆண்டு இதுவரையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கப்படவில்லை. இதனால், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே புதியதாக ஆசிரியர்கள் நியமனம் செய்யும் வரை டெட் தேர்வில் தேர்ச்சியடைந்த வேலையின்றி இருக்கும் ஆசிரியர்களை தற்காலிக பணி நியமனம் செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
ஆசிரியர்களை நியமனம் செய்வதால் மாணவர்களின் கல்வி தடையில்லாமல் இருக்கும் என பெற்றோர்கள் கருதுகின்றனர். எனவே சென்ற ஆண்டு போன்று இந்த ஆண்டும் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா என மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.