/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாலிபால் போட்டியில் சிகா பள்ளி முதலிடம்
/
வாலிபால் போட்டியில் சிகா பள்ளி முதலிடம்
ADDED : செப் 14, 2024 07:51 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வாலிபால் விளையாட்டில் முதலிடம் பெற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடந்தது.
இதில் வாலிபால் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு சிகா மேல்நிலைப்பள்ளி - காணை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வாகி விளையாடியதில், சிகா பள்ளி மாணவர்கள் முதலிடத்தை பெற்று மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமார், சிகா பள்ளி முதல்வர் கோபால், மாவட்ட வாலிபால் சங்க தலைவர் வாலிபால் மணி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜீவா, செல்வம், ராமராஜன், ராஜசேகர் ஆகியோர் பாராட்டினர்.