/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' அமைச்சர் பெயரில் அவதுாறு; வலைதளத்தில் பரப்பியவருக்கு வலை
/
'மாஜி' அமைச்சர் பெயரில் அவதுாறு; வலைதளத்தில் பரப்பியவருக்கு வலை
'மாஜி' அமைச்சர் பெயரில் அவதுாறு; வலைதளத்தில் பரப்பியவருக்கு வலை
'மாஜி' அமைச்சர் பெயரில் அவதுாறு; வலைதளத்தில் பரப்பியவருக்கு வலை
ADDED : ஏப் 19, 2024 05:27 AM
விழுப்புரம் : அ.தி.மு.க., வேட்பாளர் பற்றி 'மாஜி' அமைச்சர் பெயரில் போலி லெட்டர் பேடு தயாரித்து சமூக வலை தளத்தில் வெளியிட்டு அவதுாறு பரப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு மாஜி அமைச்சர் சண்முகம் கடந்த 13ம் தேதி கையெழுத்திட்டு எழுதியதாக ஒரு லெட்டர் பேடு சமூக வலைதளங்களில் பரவியது.
அதில் 'விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக பாக்யராஜை அறிவித்ததில் எனக்கு துளியும் விருப்பமில்லை. என்னிடம் ஆலோசனை செய்யாமல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது செயல்கள், பிரசாரங்கள், கட்சியை சிறுமைப்படுத்துவதாக அமைகிறது. கட்சியின் நடத்தைகளுக்கு மாறாக அவர் செயல்படுகிறார். அவர் மீது கட்சி நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால் தேர்தல் பணி செய்ய யாரும் வர மறுக்கின்றனர். இவருடைய வேட்பாளர் நியமனம் விழுப்புரம் தொகுதியில் அ.தி.மு.க., வெற்றியை பாதிக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்து, அ.தி.மு.க., முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோர் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தனர்.
இந்த மனு மீது ஏ.டி.எஸ்.பி., திருமால், விழுப்புரம் மேற்கு போலீஸ், மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., அறிவுறுத்தி உள்ளார்.
அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார், 'மாஜி' அமைச்சர் பெயரில் போலி லெட்டர் பேடு தயாரித்து அவதுாறு பரப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து 'மாஜி' அமைச்சர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமூக வலைதளத்தில் பரவும் தகவலை கட்சியினர் நம்ப வேண்டாம். அரசியல் நாகரீகம் இன்றி பொய் தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அ.தி.மு.க.,வினர் கவனம் சிதறாமல், தேர்தல் ஓட்டுப்பதி வில் கவனம் செலுத்த வேண் டும்'' என கூறி உள்ளார்.

