/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தென்னிந்திய ஆண்கள் கைப்பந்து போட்டி: அண்ணாமலை பல்கலைக்கழக அணி வெற்றி
/
தென்னிந்திய ஆண்கள் கைப்பந்து போட்டி: அண்ணாமலை பல்கலைக்கழக அணி வெற்றி
தென்னிந்திய ஆண்கள் கைப்பந்து போட்டி: அண்ணாமலை பல்கலைக்கழக அணி வெற்றி
தென்னிந்திய ஆண்கள் கைப்பந்து போட்டி: அண்ணாமலை பல்கலைக்கழக அணி வெற்றி
ADDED : மார் 13, 2025 06:41 AM

விழுப்புரம்; தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில் அண்ணமாலை பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் 4ம் தேதி வரை தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 81 பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்களின் அணிகள் பங்கேற்றனர்.
போட்டியில் அண்ணாமலை பல்கலைக் கழகம் சார்பில் கைப்பந்து ஆண்கள் அணி பங்கேற்று, விநாயகா மிஷன், அண்ணா, அழகப்பா, பாரதியார் பல்கலைக்கழக அணிகளோடு போட்டியிட்டு வென்று கால் இறுதிப் போட்டிக்கும், கேரளா மாநில காலிகட் அணியோடு விளையாடி லீக் போட்டிக்கும் தேர்வாகினர்.
இதில் 3வது இடத்தை அண்ணாமலை பல்கலைக்கழகம் அணி பிடித்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தது. 18 ஆண்டுகளுக்குப் பின், அண்ணாமலை பல்கலை தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் வென்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தினர் வரும் 24ம் தேதி முதல் 28 ம் தேதி வரை இமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவில் நடக்கவுள்ள அகில இந்திய அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த அணியினருக்கான பயிற்சி முகாம் விழுப்புரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு திடலில் 15 நாட்கள் நடைபெற்றது. அப்போது வென்று சாதித்த பல்கலைக்கழக அணியினரை விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சிவகுமார், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ஜோதிப்பிரியா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.