/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சென்னைக்கு 18ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
சென்னைக்கு 18ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : ஆக 15, 2024 04:29 AM
விழுப்புரம்: விழுப்புரம், கடலுார் மற்றும் புதுச்சேரியில் இருந்து வரும் 18ம் தேதி சென்னைக்கு 360 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அலுவலக செய்திக்குறிப்பு:
சென்னையில் பணிபுரியும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வார இறுதி நாளான நாளை 16ம் தேதி சொந்த ஊர்களுக்கு திரும்ப வசதியாக கிளாம்பாக்கத்தில் இருந்து மேற்கண்ட மாவட்டங்களின் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சொந்த ஊர் திரும்பியவர்கள் வரும் 18ம் தேதி சென்னை திரும்ப வசதியாக முக்கிய நகரங்களில் இருந்து 360 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
எனவே, பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து, இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.