/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளர் நலவாரியத்தில்உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம்
/
தொழிலாளர் நலவாரியத்தில்உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம்
தொழிலாளர் நலவாரியத்தில்உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம்
தொழிலாளர் நலவாரியத்தில்உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம்
ADDED : பிப் 27, 2025 07:44 AM
விழுப்புரம் ;விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் உறுப்பினர்கள் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில், வீட்டு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர் நலனை பாதுகாக்கும் வகையில், இவர்களை அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக பதிவதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாம், விழுப்புரம் கே.கே., ரோடு, ஆறுமுகம் லே-அவுட், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) என்ற முகவரியில் உள்ள தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தில் அனைத்து பணி நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடக்கிறது.
இதில், பதிய தொழிலாளர்கள் தங்களின் ஆதார், ரேஷன் கார்டு, மொபைல் எண்ணோடு நேரில் வந்து உறுப்பினராக பதிந்து நலத்திட்ட உதவிகள் பெறலாம்.