ADDED : மே 02, 2024 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
சித்திரை மாத திருவோணம்,குரு பெயர்ச்சி விழா, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவகாமி உடனுறை நடராஜர் மற்றம் குரு உள்ளிட்ட நவ கிரகங்களுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்து, மலர்களால் அலங்கரித்து மகா தீப ஆராதனை நடந்தது.
பின்னர் சிவகாமி உடனுறை நடராஜர் சுவாமி கோவில் வளாகத்தினுள் உள் புறப்படு நடந்தது. பூஜை மற்றும் அபிேஷகங்களை ரவி குருக்கள், வேதாத்திரி குருக்கள் முன்னின்று செய்தனர் .
விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

