/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்
/
மகளிர் கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்
ADDED : ஆக 29, 2024 11:45 PM

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வாணை அம்மாள் மகளிர் கல்லுாரியில் உயிர் வேதியியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரி, விலங்கியல் முதுலை மற்றும் ஆராய்ச்சி துறை உதவி பேராசிரியை தீபாராணி, வாழ்க்கை அறிவியல் துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள், பணியில் உறுதியான அர்ப்பணிப்பு, நிர்வாக திறன் குறித்து விளக்கினார்.
கருத்தரங்கில் 90 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று கலந்துரையாடினர்.
உயிர் வேதியியல் துறை தலைவர் ஸ்ரீதேவி வாழ்த்திப் பேசினார். ஆராய்ச்சி டீன் கலைமதி உட்பட பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் இந்துமதி நன்றி கூறினார்.