ADDED : ஆக 20, 2024 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் அணியும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் ஆவணி மாத பவுர்ணமி மற்றும் அவிட்டம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளில், பிராமணர்கள் மற்றும் பூணூல் அணியும் பிரிவினர்களும், இந்த நாளில் பூணூல் அணிந்துகொள்வது வழக்கமாக உள்ளது.
அதன்படி, நேற்று விழுப்புரத்தில் கோவில்களில் ஆவணி அவிட்ட நட்சத்திரத்தையொட்டி பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. கைலாசநாதர் கோவில் மற்றும் சங்கர மடத்தில் நடந்த பூணூல் அணியும் நிகழ்ச்சியில், யாக பூஜை செய்து, பூணூல் அணிந்துகொண்டனர்.
பூணூல் அணிந்துகொண்ட பிராமணர்கள், ஆர்யவைசியர்கள், விஸ்வகர்மாவினர், செட்டியார் சமூகத்தினர் கோயிலுக்குச்சென்று வழிபாடு செய்தனர்.