ADDED : செப் 01, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின விழா நடந்தது.
விழாவையொட்டி, பள்ளி தாளாளர் தேவராஜ் தேசிய கொடியேற்றினார். திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் ஒலிம்பிக்கொடியை ஏற்றி வைத்தார். சப் கலெக்டரின் துணைவியார் விருந்தா ஷிேஷாடியா குத்துவிளக்கேற்றினார். பள்ளியின் துணை தலைவர் வேல்முருகன் வரவேற்றார். தொடர்ந்து சாரண, சாரணியரின் கொடி அணிவகுப்பு நடந்தது.விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சப் கலெக்டர், டவுன் டி.எஸ்.பி.,கள் சுரேஷ் பாண்டியன், தினகரன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
விழாவில் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், பள்ளி முதல்வர் அருள்மொழி, உடற்கல்வி ஆசிரியர் பிரான்சிஸ், சோலார் பள்ளி தாளாளர் முத்து வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.