
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணிவிழா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 30ம் ஆண்டிற்கான முத்து விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.
எஸ்.பி., தீபக் சிவாச் ஒலிம்பிக் தீபம் ஏற்றி துவக்கி வைத்தார். பின், விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு, விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கலியமூர்த்திக்கு, ஜெயேந்திர பள்ளி மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
விளையாட்டு போட்டியில் வென்ற அணிக்கு ஓட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் பிரகாஷ், செயலா ளர் ஜனார்த்தனன், கல்விக்குழும உறுப்பினர்கள், முதல்வர்கள் சுமதி, மகாலட்சுமி, துணை முதல்வர் கவுதமி, விளையாட்டு துறை தலைவர் தமிழ்மணி உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.