ADDED : ஏப் 16, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே சாலையைக் கடந்த புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு ஏரியில் சில மாதங்களாக 100க்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றன. ஏரியில் இருந்து அருகாமையில் உள்ள சாலைக்கு இறை தேட மான்கள் வந்து செல்வது வழக்கம்.
நேற்று அதிகாலை 6:00 மணியளவில் மான்கள் கூட்டமாக இறை தேடுவதற்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையக் கடந்தன.
அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒரு புள்ளி மான் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே இறந்தது.
தகவலறிந்த வந்த வனத்துறையினர் மானை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

