/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
/
ஸ்ரீகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
ஸ்ரீகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
ஸ்ரீகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
ADDED : மே 18, 2024 06:03 AM

செஞ்சி : அனந்தபுரம் அடுத்த பனமலை ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மாணவி தமிழரசி 500க்கு 493, ஜோவிட்டா ஜெனட் 492, மோகனபிரியா 488 மதிப்பெண் எடுத்து முதல் 3 இடங்களைப் பிடித்தனர். 470 மதிப்பெண்ணுக்கு மேல் 19 பேர், 450க்கு மேல் 13 பேர், 400க்கு மேல் 28 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சமூக அறிவியலில் 6 மாணவர்களும், கணிதத்தில் 5 மாணவர்களும் 100 மதிப்பெண் எடுத்தனர். அதிக பட்ச மதிப்பெண்ணாக தமிழில் 98, ஆங்கிலத்தில் 99, அறிவியலில் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.
முதல் 3 இடம் பிடித்த மாணவியரை தாளாளர் சேகர், பள்ளி முதல்வர் சுஜாதா ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.
பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் உடன் இருந்தனர்.