/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீராம் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் 'சென்டம்'
/
ஸ்ரீராம் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் 'சென்டம்'
ஸ்ரீராம் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் 'சென்டம்'
ஸ்ரீராம் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் 'சென்டம்'
ADDED : மே 13, 2024 05:59 AM

செஞ்சி: நங்கிலிகொண்டான் ஸ்ரீராம் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர் சந்தோஷ் குமார் 600க்கு 556, மாணவி காயத்திரி 555, மாணவர் ஜீவித் 543 மதிப்பெண் எடுத்து முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
இதபோன்று, 10ம் வகுப்பு தேர்வில் மாணவி நிறைமதி 500க்கு 487, கனிஷா 484, கீதா 480 மிதிப்பெண் எடுத்து முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
பத்தாம் வகுப்பில் கணிதத்தில் 10 பேர், அறிவியலில் 2 பேர் என 12 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுத்தனர். அதிக பட்சமாக தமிழில் 96, ஆங்கிலத்தில் 98, சமூக அறிவியலில் 99 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தனர்.
சிறப்பிடம் பிடித்த மற்றும் தேர்ச்சி பெற்றவர் களை பள்ளி நிறுவனர் ராமன், பள்ளி தாளாளர் சத்தியகீதா ஆகியோர் கவுரவித்து பரிசு வழங்கினர்.