/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு அலுவலகங்களில் மக்களின் மனுக்களுக்கு ஒப்புகை ரசீது வழங்க நடவடிக்கை வேண்டும்
/
அரசு அலுவலகங்களில் மக்களின் மனுக்களுக்கு ஒப்புகை ரசீது வழங்க நடவடிக்கை வேண்டும்
அரசு அலுவலகங்களில் மக்களின் மனுக்களுக்கு ஒப்புகை ரசீது வழங்க நடவடிக்கை வேண்டும்
அரசு அலுவலகங்களில் மக்களின் மனுக்களுக்கு ஒப்புகை ரசீது வழங்க நடவடிக்கை வேண்டும்
ADDED : மே 28, 2024 11:29 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அரசு அலுவலகங்களில், மக்களின் மனுக்களுக்கு ஒப்புகை ரசீது தந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், சமூகநீதி பாதுகாப்பு இயக்க தலைவர் சுபாஷ், இந்திய குடியரசு கட்சி ஆறுமுகம், சமத்துவ மக்கள் விடுதலை கட்சி தீபன் உள்ளிட்ட அமைப்பினர், கோரிக்கை மனு அளித்து கூறியிருப்பது:
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில், பொது மக்கள் தங்கள் குறைகளுக்கான தீர்வு வேண்டி மனு அளிக்கின்றனர். அந்த மனுக்களுக்கு, மக்கள் குறைதீர் கூட்டத்தை தவிர இதர அலுவலகங்களில் ஒப்புகை ரசீது தரப்படுவதில்லை. இதனால், பல மனுக்கள் மீதான குறைகளுக்கு தீர்வு காணப்படாமல், மக்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இதனால் அரசு அலுவலகங்களில், மக்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதுடன், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால், கலெக்டர் அலுவலகம் முன்பு சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் நிகழ்கிறது. மேலும், பலர் குறுக்குவழியில் நிவாரணம் தேடவும் முயற்சிக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளால், பொதுமக்கள் ஏமாற்றத்துள்ளாகின்றனர்.
இதனால், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு ஒப்புகை ரசீது தர வேண்டும். இதற்காக, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறை அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, அவர்கள் குறிப்பிட்டனர்.