/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர் சாவில் சந்தேகம்; போலீஸ் விசாரணை
/
மாணவர் சாவில் சந்தேகம்; போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 30, 2024 11:34 PM
மரக்காணம் : மரக்காணம் அடுத்த சிங்கநந்தல் கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் மர்மமான முறையில் துாக்கிட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மரக்காணம் அடுத்த சிங்கநந்தல் கிராமத்தைச் சேர்ந்த எட்டியான் மகன் பிரவீன், 15; வேப்பேரி அரசு மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள மாமரத்தில் பிரவீன் மர்மமான முறையில் துாக்கிட்டு இறந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீசார், சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

