/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி
/
இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி
இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி
இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி
ADDED : செப் 08, 2024 06:23 AM
விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் இந்திரா தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஆண்ட்ருஸ் வரவேற்றார். நிகழ்ச்சியில், தாளாளர் செல்வமணி பேசுகையில், 'நீங்கள் பயிலும் 4 ஆண்டுகளும் உங்களுடைய நேரத்தை செலவிடுங்கள். வெற்றியை நாங்கள் உறுதி செய்கிறோம்.
இந்த கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லுாரியில் இயந்திரவழி கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகிய புதிய கற்பித்தல் முறைகளை அறிமுகம் செய்கிறோம்.
படித்து முடித்த பின், பணிக்கு உத்திரவாதம் ஏற்படுத்தி தருவதோடு, இந்தாண்டு முதல் நான்காம் ஆண்டு பயிலும் போதே, சம்பாதிப்பதற்கான வழியையும் உருவாக்கி தர உள்ளோம்' என்றார்.
ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அலுவலக பணியாளர் பங்கேற்றனர். இயற்பியல் துறை தலைவர் செல்வம் நன்றி கூறினார்.