/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோடைக்கால பயிற்சி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்
/
கோடைக்கால பயிற்சி நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : மே 08, 2024 11:52 PM

வானுார் : வெள்ளகுளம் கிராமத்தில் செயல்படும் வி.சி.டி.எஸ்., தொண்டு நிறுவனத்தின் சார்பில், 9ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு கோடைப்பயிற்சி முகாம் நடந்தது.
ஒன்பது நாட்கள் நடந்த இந்த பயிற்சி முகாமில், வேப்பேரி, பிரம்மதேசம், உலகாபுரம், ஆலங்குப்பம், புதுக்குப்பம், எண்டியூர், மரக்காணம், தழுதாளி, விக்ரவாண்டி ஆகிய அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 89 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முகாமில் கணிதம், ஆங்கிலம், அறிவியல், பேரிடர் மேலாண்மை, காகிதக் கலை, தலைமைத்துவம், அடிப்படை மருத்துவம் ஆகிய பயிற்சிகள் நடந்தது.
இதன் நிறைவு விழா நடந்தது. வி.சி.டி.எஸ்., செயலாளர் கவுசல்யா மார்டின் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ஏகாம்பரம், பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஹரி விநாயகமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். வி.சி.டி.எஸ்., திட்ட மேலாளர் ஜோஸ்பின் பவித்ரா தேவி, ஏசுராஜூ, பூபாலன், பன்னீர்செல்வம், அபிராமி உட்பட பலர் பங்கேற்றனர்.