/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜவகர் சிறுவர் பள்ளியில் கோடைக்கால பயிற்சி வகுப்பு
/
ஜவகர் சிறுவர் பள்ளியில் கோடைக்கால பயிற்சி வகுப்பு
ADDED : மே 01, 2024 01:52 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் அரசு ஜவகர் சிறுவர் பள்ளியில் கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்பு இன்று 1ம் தேதி முதல் துவங்குகிறது.
ஜவகர் சிறுவர் மன்றம் அரசு கலை பண்பாட்டு துறை தஞ்சாவூர் மண்டலத்தின் கீழ் செயல்படுகிறது. இதில், குரலிசை (வாய்ப்பாட்டு), நடனம் (பரதநாட்டியம்), ஓவியம், சிலம்பம் ஆகிய கலைகள் கோடைகால பயிற்சி வகுப்புகளாக நடக்கிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் இன்று 1ம் தேதி முதல் வரும் 11ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ளோர் பங்கேற்கலாம். பயிற்சி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை நடக்கிறது.
இந்த பயிற்சி, விழுப்புரம் பழைய கோர்ட் சாலை அருகே உள்ள அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. பயிற்சியின் நிறைவு நாளில் மாணவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இத்தகவலை திட்ட அலுவலர் மஞ்சம்மாள் தெரிவித்துள்ளார்.