/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது
/
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது
ADDED : ஆக 29, 2024 06:56 AM

கண்டாச்சிபுரம்: பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த கண்டாச்சிபுரம், கன்னிகா பரமேஸ்வரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சுரேஷ்; தச்சு தொழிலாளி. இவர் சமீபத்தில் கண்டாச்சிபுரத்தில் வாங்கிய இடத்தை அளவீடு செய்து, பட்டா மாற்றித் தரக்கோரி கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
தொடர்ந்து கடந்த 21ம் தேதி தாலுகா அலுவலகத்தில் இருந்த சர்வேயர் ராமமூர்த்தியை சென்று பார்த்தபோது, பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து சுரேஷ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று, தாலுகா அலுவலகத்தில் இருந்த சர்வேயர் ராமமூர்த்தி,45; மற்றும் அவரது உதவியாளர் சரத்குமார்,27; ஆகியோரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.4,400 பணத்தை கொடுத்தார்.
அந்த பணத்தை வாங்கிய சர்வேயர் ராமமூர்த்தி, அவரது உதவியார் சரத்குமார் ஆகியோரை அங்கு மாறு வேடத்தில் இருந்த டி.எஸ்.பி., திருவேல்முருகன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி ஆகியோர் கொண்ட குழுவினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.