/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கணவர் சாவில் சந்தேகம்; போலீசில் மனைவி புகார்
/
கணவர் சாவில் சந்தேகம்; போலீசில் மனைவி புகார்
ADDED : மே 03, 2024 05:35 AM
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட்டைச் சேர்ந்த சிவக்குமார், 50; இவர் அவலுார்பேட்டையில் மங்கலம் சாலையில் உரக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி சசிரேகா, 47; இருவருக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதால் சசிரேகா அவரது தாய் வீடான திருக்கோவிலுாரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை அவலுார்பேட்டை - சேத்பட் சாலையில் தனியார் பள்ளி அருகே சிவக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து அவரது மனைவி சசிரேகா, கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.