
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளராக சதிஷ்குமார் பொறுப்பேற்றார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின், விழுப்புரம் மண்டல பொது மேலாளராக பணிபுரிந்த அர்ஜூனன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, விழுப்புரம் மண்டல பொது மேலாளராக சதிஷ்குமார் நியமிக்கப்பட்டார்.
இவர், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.