/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழக முதல்வர் தலையிட வேண்டும்: ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தல்
/
தமிழக முதல்வர் தலையிட வேண்டும்: ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தல்
தமிழக முதல்வர் தலையிட வேண்டும்: ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தல்
தமிழக முதல்வர் தலையிட வேண்டும்: ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 30, 2024 11:47 PM

விழுப்புரம் : தமிழக தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'டிட்டோ ஜாக்' அமைப்பினர், பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்டு கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சங்க நிர்வாகிகள் கருத்து:
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஷேக் மூசா: 'ஆசிரியர் கூட்டணி சார்பில் கடந்த முறை போராட்டம் நடத்தியபோது, 12 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் உறுதி அளித்தார். ஆனால் இது வரை நிறைவேற்றப்படவில்லை. 243ஐ அரசாணை காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அரசாணையை உடனே ரத்து செய்வதுடன், மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றிட அரசு தரப்பில் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திண்டிவனம் அடுத்த ஒலக் கூர் வட்டார செயலாளர் கணபதி: 'தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் அறிக்கையில் பழைய ஒய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியது. ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை.
ஜனநாயக அடிப்படையில் போராடும் ஆசிரியர்களை, முன்கூட்டியே போலீசாரை வைத்து கைது செய்வது கண்டிக்தக்கது.
இந்த செயல் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். தி.மு.க.,தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தமிழ்நாடு அரசு ஆரம்ப ஆசிரியர் கூட்டணி கள்ளக் குறிச்சி மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன்: 'தமிழக அரசு, காவல் துறை மற்றும் கல்வி துறை மூலம் போராட்டத்தை முடக்க நினைக்கிறது. சென்னைக்கு போராட்டத்தில் பங்கேற்க வரும் ஆசிரியர்களை ஆங்காங்கே காவல் துறை மூலம் கைது செய்வது கண்டனத்துக்குரியது.
கடந்த சில நாட்களுக்கு முன், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என, மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., போராட்டம் நடத்தியது.
அவர்கள் போராட்டம் செய்தால் நியாயம், தமிழக அரசுக்கு எதிராக நாங்கள் போராட்டம் செய்வது தவறா' என்றார்.
தமிழக ஆசிரியர் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் ஏழுமலை: 'தி.மு.க., அரசு புதிய அரசாணையை அமல்படுத்தி ஆசிரியர்களை பழிவாங்குகிறது.
எங்களது நியாயமான போராட்டத்தை, அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்க நினைக்கிறார்கள். மேல்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் தவறான தகவலை முதல்வரிடம் தெரிவிக்கின்றனர்.
எனவே, முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் டிட்டோ ஜாக் மாநில நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சுமூக தீர்வு காண வேண்டும்.