/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2024 11:08 PM

விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் அப்துல்அமீது முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அருள்ஜோதி, கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.
நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். மத்திய அரசு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு சராசரியாக 12 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில், மருந்துகளின் விலை உற்பத்தி விலையில் இருந்து லாபம் வைத்து நிர்ணயிக்கப்படாமல் சந்தை விலையில் இருந்து தீர்மானிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். மக்களுக்கான மருந்து கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.