/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 22, 2024 12:39 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர், நேற்று ஒருநாள் விடுப்பு எடுத்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில், ஊராட்சி செயலாளர்களை, தேர்தல் வாக்குறுதியளித்தபடி தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி போராட்டத்தை துவங்கியுள்ளனர். அதன் முதற்கட்டமாக நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலைய நகராட்சி திடலில் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணை தலைவர் கவிச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நீலமேகம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட பொருளாளர் ரங்கநாதன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர். மாநில இணை செயலாளர்கள் நேரு, முனியாண்டி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் கணபதி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
முதல் நாளில், அனைத்து ஊராட்சி செயலர்களும் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். வரும் செப்.27ம் தேதி, சென்னை பனகல் மாளிகை முன்பு, மாநில அளவிலான பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தப்படும் எனத் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.