/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போன் நேரு பள்ளியில் ஆசிரியர் தின விழா
/
போன் நேரு பள்ளியில் ஆசிரியர் தின விழா
ADDED : செப் 08, 2024 06:33 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, பள்ளி தாளாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். விழுப்புரம் காமதேனு லயன்ஸ் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன், செயலாளர் விஜயசாந்தி, பொருளாளர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர் ஜெயராமன், முதல் நிலை துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கரூர் வைஸ்யா பாங்க் மேலாளர் ஆனந்த் விக்னேஷ், சேல்ஸ் மேனேஜர் விஜய பூபதி ஆகியோர், பொதுதேர்வில் 100க்கு 100 மதிபெண்கள் பெற மாணவர்களுக்கு வழிகாட்டிய 3 ஆசிரியர்களை பாராட்டி தங்க நாணயம் வழங்கினர்.
தொடர்ந்து ஆசிரியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.