ADDED : மே 08, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மொபைல் போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் முருகன், 21. இவர் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு சென்று விட்டு, ஏரிக்கரை வழியாக நடந்து சென்றார்.
அப்போது வாலிபர் ஒருவர் இவரது மொபைல் போனை பறித்துக் கொண்டு ஓட முயன்றார். அவரை, மடக்கி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில் பிடிபட்ட வாலிபர் தொரப்பாடி கிராமத்தை சேர்ந்த பாலன் மகன் சரத்குமார், 24, என தெரியவந்தது. புகாரின் பேரில வளத்தி போலீசார் வழக்கு பதிந்து சரத்குமாரை கைது செய்தனர்.