/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பணியாளர் சங்கம் முதல்வருக்கு நன்றி
/
அரசு பணியாளர் சங்கம் முதல்வருக்கு நன்றி
ADDED : செப் 15, 2024 06:41 AM
விக்கிரவாண்டி : மாநில அரசு பணியாளர்களுக்கும் பணிக்கொடையை உயர்த்தி வழங்கிய முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க விழுப்புரம் மாவட்ட தலைவர் சிங்காரம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு பணியாளர்களுக்கு பணிக்கொடை 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்கியது போல மாநில அரசு பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம்.
எங்களது கோரிக்கையை ஏற்று கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பணிக் கொடை தொகையை 25 லட்சமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. மேலும் 1.4.2003க்கு பின் அரசு பணியில் சேர்ந்த அனைத்து அரசு பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவ படியினை 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பொது சுகாதார துறையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.