/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விதைப்பண்ணை அமைக்க இலக்கு
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விதைப்பண்ணை அமைக்க இலக்கு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விதைப்பண்ணை அமைக்க இலக்கு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விதைப்பண்ணை அமைக்க இலக்கு
ADDED : ஆக 07, 2024 05:46 AM
விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 10.750 ஏக்கர் பரப்பில், விதைப்பண்ணை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது.
விழுப்புரம் விதைச்சான்று உதவி இயக்குனர் பாலசுப்ரமணியன் செய்திக்குறிப்பு: விதைப்பண்ணை அமைக்க விரும்பும், இரு மாவட்ட விவசாயிகள், அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்கள் கவனத்திற்கு. விதைப்பண்ணை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ரகம் அறிவிக்கப்பட்ட ரகமாகவும், காலக்கெடு நாள் முடிவதற்குள் விதைப்பு பணி மேற்கொள்ளப்பட்டிருக்க வெண்டும்.
விதைப்பறிக்கைகள் பதிவுக்கு, ஒரு அறிக்கைக்கு பதிவுக் கட்டணம் ரூ.25, பகுப்பாய்வு கட்டணம் ரூ.80 மற்றும் சிறுதானியங்களுக்கு வயலாய்வு கட்டணம், ஒரு ஏக்கருக்கு ரூ.100, பயிறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.80 வீதம் கட்டணம் செலுத்தி, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்ய வெண்டும்.
இவ்வாறு பதிவு செய்யப்படும் விதைப்பு அறிக்கைகள் சரிபார்த்து, விதைச்சான்று எண் வழங்கப்பட்டு, விதைச்சான்று அலுவலர்களுக்கு வயல் ஆய்விற்காக ஒதுக்கீடு செய்யப்படும். வயல் ஆய்வில் தேர்ச்சி பெறும் விதைப்பண்ணைகள், அறுவடைக்கு அனுமதிக்கப்படும்.
அறுவடை செய்யப்பட்ட விதைகளை, பைகளில் பிடித்து, அட்டைகள், வில்லைகள் பொருத்த வேண்டும். விதை சுத்திகரிப்பு பணிகள் முடிந்த பிறகு பகுப்பாய்க்கு உட்படுத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற விதைக்குவியல், அரசு சான்று வழங்கி, தரமான விதைகளாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.