/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடிநீர் பிரச்னையை கண்டித்து அரசு பஸ்சை சிறை பிடித்து மறியல்
/
குடிநீர் பிரச்னையை கண்டித்து அரசு பஸ்சை சிறை பிடித்து மறியல்
குடிநீர் பிரச்னையை கண்டித்து அரசு பஸ்சை சிறை பிடித்து மறியல்
குடிநீர் பிரச்னையை கண்டித்து அரசு பஸ்சை சிறை பிடித்து மறியல்
ADDED : மே 06, 2024 05:07 AM

வானுார் : கிளியனுார் அருகே குடிநீர் பிரச்னையை கண்டித்து, அரசு பஸ்சை சிறைபிடித்து, பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கிளியனுார் அடுத்த உப்புவேலுார் ஆதிதிராவிடர் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன், மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் விநியோகம் தடைபட்டது. நேற்று காலை வரை மோட்டார் பழுதை சரி செய்து, தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதனை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 7:50 மணிக்கு, உப்புவேலுார்-காரட்டை சாலையில் வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து, காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பழுதான மோட்டாரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.
இதையடுத்து, பொது மக்கள் 8:20 மணிக்கு அரசு பஸ்சை விடுவித்து கலைந்து சென்றனர்.