/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓவர் குடியில் சுருண்டு விழுந்தவர் சாவு
/
ஓவர் குடியில் சுருண்டு விழுந்தவர் சாவு
ADDED : மே 07, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் அதிகமாக குடித்தவர் போதையில் சுருண்டு விழுந்து இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம், காவேரிபாக்கம் மெயின்ரோட்டில் கடைகள் வைத்திருப்பவர் ராஜகுமார், 50; இவரது மனைவி ரதிதேவி மற்றும் பிள்ளைகள் சென்னை, துரைப்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். ராஜகுமார் கடைகள் உள்ள இடத்தில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அதிகளவில் மது குடித்த ராஜகுமார் மயங்கி விழுந்து இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ரதிதேவி கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

