/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலீஸ் ஏட்டை வெட்ட முயன்ற ரவுடி கைது
/
போலீஸ் ஏட்டை வெட்ட முயன்ற ரவுடி கைது
ADDED : செப் 17, 2024 04:07 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் பெண் போலீஸ் ஏட்டை கத்தியால் வெட்ட முயன்ற பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் ஊரல்கரைமேடு பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியாக செல்பவர்களை மிரட்டிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் விழுப்புரம் டவுன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிநயாதன்பிரான்சிஸ், பெண் போலீஸ் ஏட்டு சுந்தரவதனம் ஆகியோர், அங்கு விரைந்து சென்றனர். அப்போது, கத்தியுடன் நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர், கிழக்குபாண்டி ரோடைச் சேர்ந்த அப்பு(எ)கலையரசன், 30; என்பதும், பிரபல ரவுடியான அவர் மீது கொலை, விழுப்புரத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, ஏட்டு சுந்தரவதனத்தை, கத்தியால் வெட்ட முயன்றார். சுதாரித்துகொண்டு அவர் ஒதுங்கியதால் உயிர் தப்பினார்.
இதுகுறித்து ஏட்டு சுந்தரவதனம் அளித்த புகாரின் பேரில் அப்பு(எ)கலையரசன் மீது, டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து, கைது செய்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.