/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இரண்டாம் நாளாக போராட்டம் பி.டி.ஓ., அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு

ADDED : ஆக 24, 2024 07:08 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், ஊரகவளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் 20 அம்ச கோரிக்கைககளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக நேற்றும் தற்செயல்விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில், ஊரகவளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், அரசின் அனைத்து வீடு கட்டும் திட்டங்களை செயல்படுத்த உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்டு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, நேற்றும் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் மொத்தமுள்ள 801 பேரில், 450 பேர் வரை போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், அனைத்து பி.டி.ஓ., அலவலகங்களிலும், பி.டி.ஓ.,க்கள் முதல் ஊராட்சி செயலர்கள் வரை உள்ள பணியாளர்கள் பலர் வராததால், வழக்கமான அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.