/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
யுனெஸ்கோ குழு வரும் 27ல் செஞ்சி கோட்டைக்கு வருகை முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை

ADDED : செப் 13, 2024 07:28 AM

செஞ்சி: செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ குழுவினர் வருகை புரிய உள்ளதையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோவிற்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து யுனெஸ்கோ குழவினர் செஞ்சி கோட்டையை பார்வையிட வரும் 27ம் தேதி வர உள்ளனர். இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பிறகு கலெக்டர் பழனி தெரிவித்ததாவது. செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய நினைவுச்சின்னமாக அங்கீகரிப்பது தொடர்பாக வரும் 27 ம் தேதி யுனஸ்கோ குழுவினர் செஞ்சி கோட்டைக்கு வருகை புரியவுள்ளனர்.
அப்போது ராஜாதேசிங்கின் வம்சாவழியினர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும், செஞ்சிக்கோட்டையில் நடந்து வரும் சாலைப்பணிகளை 20ம் தேதிக்குள் நிறைவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழுவினர் ஆய்வு செய்யும் நாளில்
தற்காலிக கழிவறை வசதியினை ஏற்படுத்துவது, தொல்லியல்துறை மற்றும் பேரூராட்சி மூலம், கோட்டையினை சுற்றியுள்ள தனியார் இடங்களில் முட்புதர்கள், முட்செடிகளை அகற்றுவது, செஞ்சிக்கோட்டையின் வரலாற்று சிறப்புகள் குறித்த குறும்படம் தயார் செய்து யுனஸ்கோ குழுவினருக்கு திரையிட்டு காண்பிப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், சப் கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், செஞ்சி தாசில்தார் ஏழுமலை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.