/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி
/
மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி
ADDED : செப் 04, 2024 12:12 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே காட்டுப் பன்றியை விரட்ட நிலத்தில் வைத்திருந்த மின் வேலியில் சிக்கி தொழிலாளி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த வி.அரியலுார் காலனியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ரமேஷ், 39; இவரது மனைவி வீரம்மாள், 34; ஜானகிபுரம் பகுதியில் இறைச்சி கடை வைத்துள்ளனர். இவர்கள், அருகே உள்ள தளவானுார் பகுதி விவசாய நிலத்தில் இரவு காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, இருவரும் வழக்கம் போல் காவல் பணிக்குச் சென்றனர்.
அப்போது, தளவனுாரைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள நெற் பயிரை காட்டுப் பன்றிகளிடமிருந்து காப்பாற்ற தரையில் வைத்திருந்த மின் கம்பியை மிதித்த ரமேஷ், மின்சாரம்தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அதிர்ஷ்டவசமாக வீரம்மாள் உயிர் தப்பினார்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.