/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துாங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு ஜட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்
/
துாங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு ஜட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்
துாங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு ஜட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்
துாங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு ஜட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்
ADDED : ஆக 04, 2024 04:18 AM
விழுப்புரம்: வீடு புகுந்து துாங்கிய பெண்ணிடம் 4 சவரன் செயினை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு, 55; விவசாயி. நேற்று முன்தினம் இரவு வேலு மற்றும் அவரது மனைவி சாந்தா,50; மகன் ராஜேஷ், 20; மகள் சுபஸ்ரீ, 23; ஆகியோர் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 2:30 மணிக்கு வீட்டின் பின்பக்க கதவு தாழ்ப்பாளை நெம்பி திறந்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் இருவர், துாங்கிக் கொண்டிருந்த சாந்தா கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் செயினை பறித்தனர்திடுக்கிட்டு எழுந்த சாந்தாகூச்சலிடவே வேலு மற்றும் அக்கம் பக்கத்தினர் மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர்.
அதற்குள் ஜட்டி மட்டும் அணிந்திருந்த கொள்ளையர்கள் இருவரும் வீட்டின் பின்பக்க வழியாக தப்பிச் சென்றனர்.
புகாரின் பேரில் வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.