/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர் - பட்டம்' இதழ் அட்சய பாத்திரம்
/
'தினமலர் - பட்டம்' இதழ் அட்சய பாத்திரம்
ADDED : செப் 01, 2024 04:30 AM

விழுப்புரம், : 'தினமலர் - பட்டம்' இதழ் அட்சய பாத்திரமாக விளங்கி வருவதாக சரஸ்வதி சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்துசரவணன் பெருமிதம் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் நடந்த 'தினமலர்-பட்டம்' இதழ் வினாடி வினா நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
'தினமலர்' நாளிதழ், தொடர்ந்து மக்களுக்கும், மாணவர்களுக்கும் சேவையாற்றி வருகிறது. தினமலரில் பல பதிப்புகள் வந்தாலும், பட்டம் இதழ் உயர்ந்து நிற்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக பட்டம் இதழ் நம் பகுதி மாணவர்களின் மேன்மைக்கு பல தகவல்களை வழங்கி வருகிறது.
பட்டம் இதழை, ரோட்டரி மற்றும் நமது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளிகளுக்கும் வழங்கி வருகிறோம். இந்தாண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டம் இதழ்களை வழங்கி இருக்கிறோம்.
வாசிப்பு திறன் மக்களிடம் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில், 'தினமலர்' நாளிதழின் முயற்சி பாராட்டுக்குரியது. இன்று எவ்வளவோ சோஷியல் மீடியாக்கள் வந்தபோதும், 'தினமலர் - பட்டம்' இதழ் படிப்பதன் மூலம், மாணவர்களுக்கு ஒழுக்கமும், மேன்மையும் உயர்வும் வருகிறது. அட்சய பாத்திரமாக பட்டம் இதழ் விளங்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.