/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED : மே 08, 2024 11:54 PM

செஞ்சி: பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழாவினை முன்னிட்டு திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
செஞ்சி அடுத்த பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் சித்திரை மாத அக்னி வசந்த உற்சவம், கிராம தேவதைகளுக்கான திருத்தேர் உற்சவம் கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா பாரத சொற்பொழி நடந்து வருகிறது. 6ம் தேதி செம்பாத்தம்மன், பச்சையம்மன், முனீஸ்வரன், கெங்கை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, நேற்று திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இதையொட்டி, அஞ்சாஞ்சேரி கிராமத்தில் இருந்து திரவுபதி அம்மனுக்கு தாய் வீட்டு சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட கிருஷ்ணர், அர்சுனன், திரவுபதி கோவில் மண்டபத்தில் எழுந்தருளி அர்சுனன், திரவுபதி திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் தொடர்ச்சியாக 11ம் தேதி தபசு ஏறும் நிகழ்ச்சி, 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை உபயதாரர்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.