/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாலிபரை கத்தியால் தாக்கி போன் பறிப்பு திருவெண்ணெய்நல்லுாரில் பரபரப்பு
/
வாலிபரை கத்தியால் தாக்கி போன் பறிப்பு திருவெண்ணெய்நல்லுாரில் பரபரப்பு
வாலிபரை கத்தியால் தாக்கி போன் பறிப்பு திருவெண்ணெய்நல்லுாரில் பரபரப்பு
வாலிபரை கத்தியால் தாக்கி போன் பறிப்பு திருவெண்ணெய்நல்லுாரில் பரபரப்பு
ADDED : ஆக 15, 2024 05:30 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மூன்று பேரை கத்தியால் தாக்கி மொபைல் போன் பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்தானங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் சத்யராஜ், 22; இவர் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் அவரது வீட்டின் வெளியே நின்று மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பைக்கில் வந்த இருவர் சத்யராஜிடம் மொபைல் போனை பறிக்க முயற்சி செய்தனர். சத்யராஜ் தராமல் இழுத்து பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
அப்போது சத்தம்கேட்டு சத்திரயராஜின் பெற்றோர் வீட்டிலிருந்து சம்பவ இடத்திற்கு சென்று தடுத்துள்ளனர். சத்தியராஜ் மற்றும் அவரது தந்தை பாஸ்கரன் தாய் பழனியம்மாள் ஆகிய மூவரையும் கத்தியால் தாக்கிவிட்டு மொபைல் போனை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச்சென்றனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின்பேரில் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.