/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் - சந்தைமேடு புறவழிச்சாலையில் காட்சிப் பொருளான ைஹமாஸ் விளக்கு

ADDED : ஏப் 08, 2024 06:12 AM

திண்டிவனம்: திண்டிவனம் - சந்தைமேடு புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்த நிலையில், அமைக்கப்பட்ட ைஹமாஸ் விளக்கு எரியாமல் காட்சிப் பொருளாக உள்ளது.
திண்டிவனம் - கிருஷ்ணகிரி இடையிலான 178 கி.மீ., துாரத்திற்கு நகாய் சார்பில், 610 கோடி ரூபாய் செலவில் சாலை பணிகள் முடிந்தது.
இதில், சந்தைமேடு அருகே, அய்யந்தோப்பு பகுதியில், அரசு கல்லுாரி செல்லும் சாலையில் விபத்தைத் தவிர்க்க ரவுண்டானா அமைக்கப்பட்டது.
இரவு நேரங்களில் அப்பகுதி இருளில் மூழ்குவதால் விபத்து அபாயம் ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க ைஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
அதன் பேரில், நகாய் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் ைஹமாஸ் விளக்கு அமைத்தனர். ஆனால், இதுவரை ைஹமாஸ் விளக்குகள் எரியாமல் உள்ளது.
ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ள பகுதி, கூட்ரோடு என்பதால், நான்கு பக்கமும் வாகனங்கள் வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி ைஹமாஸ் விளக்குகள் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.