/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு
/
திண்டிவனம் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு
திண்டிவனம் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு
திண்டிவனம் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 02, 2024 01:57 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் நகராட்சி சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திண்டிவனம் நகராட்சி சார்பில் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் 6 ஏக்கர் பரப்பளவில் 20 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை, கலெக்டர் பழனி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், மழைக்காலத்தில் மழை நீர் தங்கு தடையின்றி சென்றிடும் வகையில் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், கமிஷனர் (பொறுப்பு) ரமேஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மோகன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.