நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அடுத்த செண்டூர் தொண்டியாற்றில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மயிலம் வள்ளி, தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது.
விழாவையொட்டி, நேற்று மதியம் 12:00 மணிக்கு மயிலம் வள்ளி, தெய்வானை சுப்ரமணிய சுவாமி மயிலம் மலைக் கோவிலிலிருந்து புறப்பட்டு செண்டூர் தொண்டி ஆற்றில் தீர்த்த வாரி நடந்தது. மாலை 5:30 மணியளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது.
ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.