/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லட்சுமி குபேர கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
லட்சுமி குபேர கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஏப் 25, 2024 03:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மொளசூர் கோவடி செல்லும் ரோட்டில் அமைந்துள்ள லட்சுமி குபேர தேவஸ்தான வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
வைஸ்ரவணன் (எ) குபேரனுக்கும், தேவலோக மங்கையான ரதி (எ) சித்ரலேகாவிற்கும் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோபிசெட்டிப்பாளையம் சம்பந்தமூர்த்தி, புதுச்சேரி தயாநிதி, முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

