/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு :மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்பு
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு :மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு :மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு :மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்பு
ADDED : செப் 15, 2024 06:41 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வில், 15 ஆயிரத்து 708 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ( டி.என்.பி.எஸ்.சி.,) மூலம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு ௨ (தொகுதி-௨ மற்றும் ௨ஏ) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 53 தேர்வு மையங்களில் தேர்வு எழுத 21 ஆயிரத்து 80 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். நேற்று நடந்த தேர்வில் விழுப்புரம் வட்டத்தில் உள்ள 33 மையங்களில் 11 ஆயிரத்து 181 பேர், திண்டிவனம் வட்டத்தில் உள்ள 20 மையங்களில் 4 ஆயிரத்து 527 பேர் உட்பட மொத்தம் 15 ஆயிரத்து 708 பேர் தேர்வு எழுதினர். விண்ணப்பித்த நபர்களில் 25.49 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்திற்கு, நேற்று காலை நேரில் சென்ற கலெக்டர் பழனி, ஆய்வு செய்தார்.
அவர் கூறுகையில், 'தேர்வர்கள் மையத்திற்கு செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டது.
தேர்வு மையங்களில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன' என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், உதவி ஆணையர் (கலால்) முருகேசன் உடனிருந்தனர்.