/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாலுகா அலுவலத்தில் டிராக்டர் டிப்பர்கள் மாயம்
/
தாலுகா அலுவலத்தில் டிராக்டர் டிப்பர்கள் மாயம்
ADDED : ஆக 23, 2024 01:00 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டர் டிப்பர்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி ஏரியில் இருந்து மண் கடத்திய 2 டிராக்டர் டிப்பர்களை வருவாய்துறையினர் சில தினங்களுக்கு முன் பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகம் முன் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த இரு டிராக்டர் டிப்பர்களும் நேற்று முன்தினம் மாயமானது குறித்து, சமூக வலைதளத்தில் வைரலானது.
இதுகுறித்து தாசில்தார் அனந்தகிருஷ்ணன் விசாரித்ததில், செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி,48; என்பவர் வீட்டின் முன் டிராக்டரில் இருந்த மண் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் தாசில்தார், பெரியசாமியிடம் டிராக்டர் டிப்பர்களை கொண்டு வந்து நிறுத்தக் கூறினார். அப்போது பெரியசாமி திடீரென மயங்கி விழுந்தார்.
உடன் அவரை, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .
இச்சம்பவம் உளுந்துார்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

