/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நுண்ணீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
/
நுண்ணீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஆக 12, 2024 05:58 AM

வானுார்: வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் ஆத்மா திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த பயிற்சிக்கு, வேளாண்மை உதவி இயக் குனர் எத்திராஜ் வரவேற்றார். அப்போது, பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசு திட்டங்கள், நுண்ணீர் பாசனத்திற்கான மானிய விவரம், வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ள விதைகள், இடுபொருட்கள் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவரசன், பயறு வகைகள் மற்றும் எண்ணைய் வித்து பயிர்களில் நவீன முறையில் மேட்டுப்பாத்தி கொண்டு சொட்டு நீர் பாசனம் அமைப் பது. மழை துவுவான் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகள் மூலம் பயிர்களில் அதிக மகசூல் எடுப்பது. புதிய ரகங்கள் சிறப்பியல்கள் குறித்த சாகுபடி விவரங்கள் குறித்து பேசினார்.
வறட்சி காலங்களில் பயறு வகை பயிரில் பொட்டாசியம் குளோரைடு எவ்வாறு தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
சொட்டுநீர் பாசன நிறுவன அலுவலர் மணிகண்டன் சொட்டுநீர் அமைத்த பின்பு, அதனை எவ்வாறு பராமரிப்பது மற்றும் சொட்டுநீர் அமைக்க தேவையான ஆவணங்கள் குறித்து பேசினார். பயிற்சியில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.