/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோலியனுார், விக்கிரவாண்டியில் பா.ம.க., வினரின் அஞ்சலி நிகழ்ச்சி
/
கோலியனுார், விக்கிரவாண்டியில் பா.ம.க., வினரின் அஞ்சலி நிகழ்ச்சி
கோலியனுார், விக்கிரவாண்டியில் பா.ம.க., வினரின் அஞ்சலி நிகழ்ச்சி
கோலியனுார், விக்கிரவாண்டியில் பா.ம.க., வினரின் அஞ்சலி நிகழ்ச்சி
ADDED : செப் 18, 2024 04:10 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கோலியனூரில் தியாகிகள் நினைவிடத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள, இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் நினைவிடத்தில், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று மதியம் 12:30 மணிக்கு அஞ்சலி செலுத்தினர்.
வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, சமுகநீதிப் பேரவை தலைவர் பாலு, மாநில மாணவர் சங்க செயலர்கள் முகுந்தன், பரசுராமன், எம்.எல்.ஏ., சிவக்குமார், மாவட்ட தலைவர்கள் தங்கஜோதி, புகழேந்தி, மாவட்ட செயலர்கள் பாலசக்தி, ஜெயராஜ், அமைப்பு செயலர்கள் பழனிவேல், மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
விக்கிரவாண்டி: நேற்று பா.ம.க., சார்பில் மாநில தலைவர் டாக்டர் அன்புமணி தலைமையில், சித்தணி,பாப்பனப்பட்டு,பனையபுரம் ஆகிய இடங்களில் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின் கட்சி நிதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தால ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
வட்ட செயலாளர்கள் காமராசு, புண்ணியக்கோட்டி, மாவட்ட அமைப்பு செயலாளர் மணிமாறன், துணை செயலாளர் திருமுருகன்,நகர செயலாளர் சங்கர், தொண்டர் அணி ராஜா, இளைஞரணி கனகரத்தினம், பசுமை தாயகம் செயலாளர் கதிரேசன், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், செல்வகுமார், செயற்குழு உறுப்பினர் ராஜூ,கோபாலகிருஷ்ணன், ஏழுமலை, ரமேஷ், காமராஜ், சிவசக்தி, ஜெயராஜ், மோகன்,தீனவேலு ,ரவி சம்பத், சதாசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.