/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விஸ்வகர்மா பேரவையில் முப்பெரும் விழா
/
விஸ்வகர்மா பேரவையில் முப்பெரும் விழா
ADDED : மே 02, 2024 06:55 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் ஒன்றிய விஸ்வகர்மா பேரவைதுவக்கவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது.
விக்கிரவாண்டியில் அகில இந்திய விஸ்வகர்மா பேரவை சார்பில் மே தினம் ,கட்சி நிறுவனர் நினைவு,புதிய ஒன்றிய விஸ்வ கர்மா பேரவை துவக்க விழா ஆகிய முப்பெரும் விழாவிற்கு நகர கவுரவத் தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் குமரவேல், சட்ட ஆலோசகர் மணிகண்டன், நகர தலைவர் பாண்டுரங்கன் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் வெற்றிவேல் வரவேற்றார்.பேரவை தேசிய தலைவர் குமார், சங்க கொடியேற்றி, புதிய கிளையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தேசிய பொதுச் செயலாளர் மருத ராஜகணேஷ்மாநில கவுரவ தலைவர் ரமேஷ், மாநில தலைவர் ஜெகதீசன், மாநில பொருளாளர் சிவக்குமார், ஒன்றிய தலைவர் ரமேஷ், நெப்போலியன், மூர்த்தி சிறப்புரையாற்றினர். ஒன்றிய நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஒன்றிய செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

