/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கிட விழுப்புரம் சுதாகர் நகரில் 'டர்ப் - 32'

ADDED : ஜூலை 18, 2024 05:58 AM

விழுப்புரம் சுதாகர் நகர் ஏ.எஸ்.ஜி., திருமண மண்டபம் எதிர்புறம், டர்ப் - 32, இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கி வருகிறது. விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சுதாகர் நகர் ஏ.எஸ்.ஜி., திருமண மண்டபம் எதிர்புறம், நவீன கால்பந்து பயிற்சி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
டர்ப் - 32 என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ள மைதானத்தில், பள்ளிகளில் பயிலும் 4 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கால் பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த மையத்தில், தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் மாணவர்களுக்கு, பிரத்யேக பயிற்சியாளர்கள் மூலம், பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மைதானம், செயற்கை புல்தரை, வலை தடுப்பு (நெட்), இரவில் வெளிச்சத்தை பாய்ச்சும் வகையில் ைஹமாஸ் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு பயிற்சி பெற்ற கால்பந்து வீரர்கள் பலரும், மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். மேலும் 4 மாணவர்கள், தேசிய அணிக்கான தேர்வு போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்த பயிற்சி மையத்தில், மாணவர்கள் சேர்க்கை கட்டணம் ரூ.2 ஆயிரமும், தொடர்ந்து மாதந்தோறும் ரூ.1,500 ம் பயிற்சி கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.