/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.வெ.க., பொதுச் செயலாளர் பிறந்த நாள் விழா
/
த.வெ.க., பொதுச் செயலாளர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 20, 2024 05:45 AM

விழுப்புரம்: தமிழக வெற்றிக்கழகம் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்ட இளைஞரணி சார்பில் புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது.
மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கி, புஸ்சி ஆனந்த்தை சந்தித்து வாழ்த்து கூறி பூங்கொத்து வழங்கினார். பின், இளைஞரணி தலைவர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள், கேக் வெட்டி கொண்டாடினர்.
தொடர்ந்து, அங்காளம்மன் கோவிலில் அன்னதானம் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி செயலாளர் தீனா, காணை ஒன்றிய இளைஞரணி தலைவர் மணி, ஒலக்கூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் மணிகண்டன், வானுார் ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திக், செயலாளர் பிரகாஷ்.
கிளியனுார் ஒன்றிய இளைஞரணி செயலாளர் வினோத்குமார், மரக்காணம் ஒன்றிய இளைஞரணி தலைவர்கள் பழனி, சுமன், ஆனந்த், அசோக், விக்கிரவாண்டி ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர்கள் சிவமூர்த்தி, மணி, வானுார் தொகுதி இணை பொறுப்பாளர்கள் பிரகாஷ், அரவிந்த்ராஜ் உட்பட பலர் பங்கேற்னர்.